Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காலா' படத்தின் கதை என்னுடையது..!' - புதிய சர்ச்சை ஆரம்பம்

மும்பையில் ' காலா' படத்தின் ஷூட்டிங் பிஸியாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், 'ரஜினியின் 164-வது படமான 'காலா' திரைப்படத்தின் கதை தன்னுடையது' என்று ராஜசேகர் என்பவர் புகார் மனு ஒன்றை சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அளித்துள்ளார்.

அதில், '' 'காலா' படத்தின் மூலக்கரு என்னுடையது. கரிகாலன் என்ற தலைப்பில் நான் 1996 ஆம் ஆண்டே இந்தப் படத்துக்கான பூஜையை நடத்திவிட்டேன். தற்போது, படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு திருடப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே இந்தப் படத்தின் தலைப்பைப் பதிவுசெய்தும்விட்டேன்’' என்று மனுவில் தெரிவித்துள்ளார்.


மேலும், 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, தனக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 'காலா' படத்தைப் பற்றிய இந்தப் புதிய விவகாரம், கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close