Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார் விபத்து... தால் ஏரிக்குள் விழுந்த 'டங்கல்' நாயகி!

'டங்கல்' படத்தில் நடித்த ஸைரா வாசிமின் கார் விபத்துக்குள்ளாகி, காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் விழுந்துள்ளது.

டங்கல்

கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையை தழுவி 'டங்கல்' திரைப்படம் வெளியானது. அமிர்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா, சீனா என உலக அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் அமிர்கானின் மகளாக (சிறுவயது) நடித்திருந்தார் ஸைரா வாசிம். இவரின் துனிச்சலான நடிப்புக்கு பல்வேறு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இதனிடையே காஷ்மீரில் ஸைரா வாசிம் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி இவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஶ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து உள்ளூர் பொதுமக்கள் அவர்களை மீட்டுள்ளனர். இதில் அவருக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. கார் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close