Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவில் வசூலை வாரிக் குவிக்கும் 'டங்கல்' : 2,000 கோடியை நெருங்குகிறது..!

அமீர்கான் நடிப்பில் வெளியாகிய 'டங்கல்' திரைப்படம் சீனாவில் மட்டும் 1,100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. விரைவில் டங்கல் படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அமீர்கான் நடித்த 'டங்கல்' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் வெளியாகியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிய இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியாகியது. சீனாவிலும் இந்தப் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதுவரையில் சீனாவில் மட்டும் 1,130 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இதனையடுத்து 'டங்கல்' படத்தின் மொத்த வசூல் 1,913 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் 2,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close