Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

300 திரையரங்குகளில் புலிமுருகன்!

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் 35 கோடி  பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'புலிமுருகன்' திரைப்படம், கேரளாவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.  

மோகன்லால்

இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்து வெளியிடுவதாகயிருந்த நிலையில், சில காரணங்களுக்காக 'புலிமுருகன்' தமிழ் ரீமேக் கைவிடப்பட்டது. தற்போது டப்பிங் செய்யப்பட்டு தமிழில் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸாகிறது. தமிழில் ஆர்.பி.பாலா வசனம் எழுதியிருக்கும் இந்தப் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 300 திரையரங்குகளில் வெளியாகிறது.  தமிழகத்தில் பாகுபலி படத்துக்குப் பிறகு ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. வைசாக் இயக்கிய 'புலி முருகன்' படத்தைத் தமிழில் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close