Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துல்கர் சல்மானின் அடுத்தத் தமிழ் படம்!

மலையாளத்தில் பலரின் ஃபேவரைட் ஹீரோவாக இருக்கும் துல்கர் சல்மான், தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த துல்கர் தற்போது நடிகை சாவித்திரியின் பயோபிக்கில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

துல்கர் சல்மான்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு 'நடிகையர் திலகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் துல்கர் தனது அடுத்தத் தமிழ் படத்துக்கு ரெடியாகி விட்டார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்குகிறார். பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்தப் படத்தில் துல்கருக்கு மூன்று கதாநாயகிகளாம். துல்கரின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த இயக்குநருக்கு அவரின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்குமாம்.

மேலும், இந்தப் படத்தைக் கெனன்யா பில்ம்ஸ் தயாரிக்கிறது. தெறி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக தீனதயாளன் மற்றும் எடிட்டராக 'காலா' படத்தின் எடிட்டரான ஶ்ரீகர் பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close