Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யராஜ், சரத்குமார் உட்பட எட்டு பேர் மீதான பிடிவாரன்ட்டுக்கு உயர்நீதிமன்றம் தடை!

பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட  எட்டு பேருக்கு நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த பிரவாரன்ட்டுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சென்னையில், 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஆஜராகாததால் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம், எட்டுப் பேருக்கும் பிணையில் வர முடியாத அளவில் பிடிவாரன்ட் பிறப்பித்தது. 

சத்யராஜ்


பிடிவாரன்ட்டை ரத்துசெய்யக்கோரி, எட்டு பேரும் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களைத் தள்ளுபடிசெய்த நீதிபதி, பிடிவாரன்ட்டை உறுதிசெய்தது. மேலும், ஜூன் 17 ஆம் தேதிக்குள் எட்டு பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , 'நீலகிரி நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த பிடிவாரன்ட்டுக்குத் தடை விதித்ததோடு, மறு உத்தரவு வரும் வரை வழக்கை விசாரிக்கக் கூடாது' என்று கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close