Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானில் சல்மான் கான் படத்துக்கு எதிர்ப்பு..!

1962 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்தப் போரை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் 'டியூப்லைட்' . சல்மான் கான் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சீன நடிகை ஜூஜூ நடித்துள்ளார். மேலும், ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.


ஜூன் மாதம் 23 ஆம் தேதி, ரம்ஜான் ஸ்பெஷலாக 'டியூப்லைட்' ரிலீஸாகிறது. சல்மான் கானின் திரைப்படம் பாகிஸ்தானில் ரிலீஸாவது வழக்கம். கடந்த வருடம் ரம்ஜானுக்கு 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகி ஹிட் அடித்தது. அதனால் இவரின் 'டியூப்லைட்' திரைப்படத்தையும் இந்த வருடம் பாகிஸ்தானில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.


ஆனால், பாகிஸ்தானில் இந்தப் படத்தை திரையிட அந்நாட்டு விநியோகஸ்தர்கள் மறுத்துள்ளனர். ஏற்கெனவே ரம்ஜானுக்கு இரண்டு பாகிஸ்தான் படங்கள் ரிலீஸாக இருப்பதால், 'டியூப்லைட்' படத்தை ரிலீஸ் செய்தால் வணிக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது. ரம்ஜான் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப் படம் பாகிஸ்தானில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close