Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தானா சேர்ந்த கூட்டத்தில்' சேரும் கார்த்திக்!

'நானும் ரெளடிதான்'  படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'  இதில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

karthik

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்னன், சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி என ஒரு பட்டாளமே நடிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழில் மீண்டும் (புதிய முகம் படத்திற்குப் பின் ) சுரேஷ் மேனன் நடிக்கிறார்.  இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக்  நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், கார்த்திக் கலந்துகொள்ள இருக்கிறார். கார்த்திக்கும் சூர்யாவும் இணைந்து நடிக்கும் படமென்பதால், அவர்களின்  ரசிகர்கள் மத்தியில் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்தப் படம் இந்தியில் வெளியான 'ஸ்பெஷல்  26' படத்தின் ரீமேக் என்ற பேச்சும் அடிபடுகிறது. படத்தின் சில ஸ்டில்கள், ஆன்லைனில் வெளியாகியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close