Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சுவாதி கொலை வழக்கு' படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரைக் கைது செய்யத் தடை!

சுவாதி கொலை வழக்கு படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வம் உள்பட மூன்று பேரைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி ஐ.டி பெண் பொறியாளர் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்பவரைக் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் ஜூலை 18-ஆம் தேதி மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இயக்குநர் ரமேஷ், 'சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்கு சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'சுவாதி கொலை வழக்கு' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இயக்குநர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோர்மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்தநிலையில், மூன்று பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மூன்று பேரையும் கைது செய்யக்கூடாது என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close