Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரன், நெப்போலியன்..!

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என சிவகார்த்திகேயனை வைத்து ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படங்களை எடுத்தவர் இயக்குநர் பொன்ராம். தற்போது, தனது மூன்றாவது படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்தே தொடங்கியுள்ளார் பொன்ராம்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே இரண்டு படங்கள் ஹிட் அடித்ததால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இசையமைப்பாளராக டி.இமானே ஒப்பந்தமாகியுள்ளார்.  

sivakarthikeyan


சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள சமந்தா இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் கற்று வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களாக நடிப்பதற்கு சிம்ரன் மற்றும் நெப்போலியன் கமிட்டாகியுள்ளனர். இந்தப் படத்திற்கான பூஜையில் சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான், சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும், பாடலாசிரியராக யுகபாரதியும் ஒப்பந்தமாகியுள்ளனர். ரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களைத் தயாரித்த ஆர்.டி.ராஜா இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற உள்ளது. பொன்ராமின் முந்தைய இரண்டு படங்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். ஆனால், இந்தப்படத்தில் ஆக்ஷன் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று தெரிவிக்கிறது படக்குழு. அடுத்து ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது படக்குழு.

சிவா-பொன்ராம் இணை ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துவோம்!

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close