Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கும்கி-2 பட வேலைகள் விறுவிறு..!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் அறிமுகமான 'கும்கி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்தன. 

kumki


தற்போது, 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் முயற்சியில் பிரபு சாலமன் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்தப் படத்தை பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் ஒன்றும் வெளிவந்துள்ளது. 

ஷிவானி


'கும்கி 2' படத்திற்கு கதாநாயகியாக நடிக்க 'இதுதாண்டா போலீஸ்' படத்தில் நடித்த ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியின் மகளான ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுபற்றி ஷிவானியின் அம்மா ஜீவிதாவிடம் கேட்டப்போது, 'என் மகள் 'கும்கி 2' படத்தில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்றார். 'கும்கி 2' படத்தில் விக்ரம் பிரபுவே ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close