Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலில் 'பாகுபலி-2'... அடுத்து '2.0'... இப்போது 'வேலைக்காரன்'!

சிவகார்த்திகேயன்

கல்லூரி படிக்கும்போது கஷ்டப்பட்டு காம்பியரிங் செய்து  உழைத்துப்  பிழைத்துக் கட்டணம் செலுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர், சிவகார்த்திகேயன். திடீரென லட்சங்களை, கோடிகளைப் பார்க்கும் நடிகர்கள் பலர் ஆடாத ஆட்டம் ஆடி 'இனிமேல் இதுதான் நம்ம வாழ்க்கை...' என்று தப்பாக கணக்குப் போட்டு, தப்பான பாதையில் பயணித்து கோடம்பாக்க  சினிமாவில் காணாமல் போனவர்கள் உண்டு. நிதானமாக அடியெடுத்து வைப்பவர்களால் மட்டுமே தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி கட்ட முடியும். அந்த வரிசையில் தெளிவு திலகம் சிவகார்த்திகேயன்.

விஜய்டிவியில் ஆயிரங்களில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய நிலைமைமாறி கோடிகளை சம்பளமாக பெறும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் செம தெளிவாக இருக்கிறார்.  முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இருக்கும் ஹன்சிகா மோத்வானியுடன் 'மான் கராத்தே' படத்தில் ஜோடி சேர்ந்த இவர், 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாராவை டிக் செய்துவிட்டார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவை ஓகே செய்துவிட்டு தென்காசிக்கு படப்பிடிப்புக்காகச் சென்று விட்டார்.  

'வேலைக்காரன்' படத்தின்  டப்பிங் எங்கே வைத்துக் கொள்வது என்று மோகன்ராஜா விவாதம் செய்தபோது  'பிரசாத் லேப்தான் பெஸ்ட்' என்று  கூலாக கூறியவர் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிவகார்த்திகேயன் சென்டிமென்ட் நடிகர்.  'பாகுபலி -2' படத்தின்  டப்பிங் இங்கேதான் செய்யப்பட்டது. அடுத்து  '2.0' படத்துக்காக ரஜினி பிரசாத்தில்தான் டப்பிங் பேசினார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 'வேலைக்காரன்' படத்துக்காக டப்பிங் பேசியவர். இப்போது அடுத்த படத்தின் முதல்ஷெட்யூலுக்காக தென்காசி சென்று இருக்கிறார். அதுசரி 'வேலைக்காரன்' படத்தின் ரிலீஸ் எப்போது? சரஸ்வதி பூஜை அன்று 'வேலைக்காரன்' வெளியாகிறது என்கிறது பட்சி! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close