Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' ஃபர்ஸ்ட் லுக்!

'துருவங்கள் பதினாறு' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'நரகா சூரன்'. இதில் அரவிந்த் சுவாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.

கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனத்துடன், கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்குப் பிடித்திருந்த போதிலும் அவரால் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியமால் போனது. 

படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்ஸ் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில்,  'நரகா சூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அரவிந்த் சுவாமிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டிதான், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close