Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யராஜின் நிஜப் பெயர் என்ன? - சிபிராஜ் படங்கள்தான் க்ளூ

தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் நடிகர் சிபிராஜ், தான் நடிக்கும் படங்களின் கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம்செலுத்திவருகிறார். இவரது நடிப்பில் வெளிவரப்போகும் 'சத்யா' படத்தின் ட்ரெய்லர், அண்மையில் வெளியாகி, சிபிராஜின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பைப் பெற்றது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சிபியை, 'சத்யா' படத்தின் அப்டேட்ஸ் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடர்புகொண்டோம்.'' 'கட்டப்பாவ காணோம்' படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது, தெலுங்கில் வெளியாகியிருந்த 'ஷணம்' படத்தைப் பார்த்தேன். 

sibiraj



அப்போதே, இந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி நடிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். தமிழ் உரிமைக்காக பலபேர் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர். என் விருப்பப்படி 'ஷணம்' படத்தின் தமிழ் உரிமை எனக்கே கிடைத்தது. விஜய் ஆண்டனியிடம், 'ஷணம்' படத்தை தமிழில் இயக்க இயக்குநர் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அவர்தான், 'சைத்தான்' படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம்செய்தார். விரைவில், பிரதீப் இயக்கத்தில் 'சத்யா' படத்தை திரையில் பார்க்கலாம்’’ என்றவரிடம், ஒரிஜினல் 'ஷணம்' படத்துக்கும் 'சத்யா' படத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டோம்.

sathya



‘’நாங்கள், திரைக்கதையில் எந்த மாற்றத்தையும் புகுத்தி அதன் இயல்பைக் கெடுக்கவில்லை. ஆனால், இயக்குநர் கதை சொன்ன விதத்தில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தப் படத்துக்கு 'சத்யா' என்கிற பெயர்தான் வைக்க வேண்டும் என்று நாங்கள் தீர்க்கமாக இருந்தோம். கமல் சாரிடம் கேட்டவுடன், அவரும் ஓகே சொல்லிவிட்டார். இதுமட்டுமில்லாமல், அப்பா பெயரின் பாதி இதில் வருவதால், கொஞ்சம் சென்டிமென்ட்டாகவும் இருக்கு’’ என்று சொல்லிச் சிரிக்கிறார். 

'சத்யா' படத்தை அடுத்து, 'ரங்கா' என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார் சிபி. தொடர்ந்து கமல், ரஜினி படத்தின் டைட்டில்கள் வைக்க என்ன காரணம் என்று கேட்டப்போது, ‘இயக்குநர்தான் இந்தப் படத்துக்கு 'ரங்கா' என வைத்தால் சரியாக இருக்கும் என்றார். 'ரங்கா' படத்தில், ஹீரோ சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்னையைத் தீர்த்துவைப்பது போன்ற கதை. அதற்கு, காக்கும் கடவுளான 'ரெங்கநாதன்' துணை நிற்பார்னு அந்தப் பெயரை செலெக்ட் பண்ணினார் டைரக்டர். அதுமட்டுமில்லாம, 'ரங்கா' என்ற பெயரிலும் அப்பாவோட பெயர் இருக்கு. இதிலேயும் அதே சென்டிமென்ட் தான்’’ என்றார். ஆம், நடிகர் சத்யராஜின் இயற்பெயர் ரங்கராஜ். சினிமாவுக்காக வைத்த பெயர்தான், சத்யராஜ்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close