Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''என் அடுத்த படத்துக்கும் விதார்த் தான் ஹீரோ..!'' - 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர்

'காக்கா முட்டை' இயக்குநர்  மணிகண்டனிடம்  உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் சங்கையாவின் முதல் படம், 'ஒரு கிடாயின் கருணை மனு'. இந்தப் படம், சுரேஷ் சங்கையாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இவர், 'கடவுள் ஏன் கல்லானான்' என்ற படத்தை அடுத்து இயக்கப்போவதாக அண்மையில் தகவல் வந்தது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றித் தெரிந்துகொள்ள சுரேஷ் சங்கையாவைத் தொடர்புகொண்டோம். ''எனது அடுத்த படத்துக்கு  'கடவுள் ஏன் கல்லானான்' என்ற பெயரை ரைட்ஸ் பிரச்னை காரணமாக வைக்க முடியவில்லை. அதனால், வேறு பெயரை யோசித்துவருகிறோம். விரைவில் படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

oru kidayin karunai manu.

இந்தப் படத்தில், 200 புதுமுகங்களை நடிக்கவைப்பதற்காக, ராமநாதபுரம் ஊர் மக்களாகத் தேடி வருகின்றேன். படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் பகுதியில்தான் நடத்த உள்ளோம். இந்தப் படத்திலும் கதாநாயகனாக விதார்த் நடிக்கிறார். டப்பிங்கிலும் ஒரிஜினல் வாய்ஸ் பேசும் பெண் வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழ் பேசத் தெரிந்த பெண்ணைத்தான் கதாநாயகியாக நடிக்கவைக்க தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close