Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எட்டு கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இயக்கிய இந்தப் படத்தில், 'விஜய் சேதுபதி நடிப்பைப் பார்த்து வியந்துபோனேன்' என்று அவரே தெரிவித்துள்ளார்.

vijaysethupathi


''விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் பழங்குடி இனத் தலைவராக நடித்துள்ளார். மேலும், எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநராக மட்டுமன்றி அவரது தீவிர ரசிகராகவும் இந்தப் படத்தில் அவரது நடிப்பை ரசித்தேன் . இந்தப் படத்தில், அவருடைய கதாபாத்திரங்கள் மிகமிக சுவாரஸ்யமானவை மட்டுமன்றி,  மிகவும் சவாலானதும்கூட. இந்தச் சவாலை, அவர் மிகச் சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்தியுள்ளார். அதைப் பார்க்கும்போது, எனக்கே வியப்பாகவுள்ளது. அவரது ரசிகர்களை மட்டுமன்றி எல்லோரையும் கவரும்' என்று கூறியுள்ளார்.  ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படம், அக்டோபரில் ரிலீஸாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close