Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்! - முதல்வருக்கு விஷால் கோரிக்கை

தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் 41 நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.

vishal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால்,சிறிது நாள்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் தற்காலிகமாகப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் சில சினிமா பிரபலங்கள் டெல்லிக்குச் சென்று தங்களின் ஆதரவை அளித்தனர். 

விஷால்


இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர் விஷால் ஒரு வேண்டுகோளை முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர், 'அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசத்திலும், மகாராஷ்ட்ராவிலும் விவசாயக் கடன்களை அந்த அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதை அறிந்த பஞ்சாப் மாநில அரசும் விவசாயக் கடன்களை ரத்து செய்தது. அதே போல் நமது தமிழ்நாடு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும்' என்று கேட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close