Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜேசன் ஸ்டாதமுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதமுக்கு ஆண் குழந்தை பிறந்ததுகுறித்து, அவரது வருங்கால மனைவி ரோஸி ஹட்டிங்டன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

jason statham rosie huttington

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர், ஜேசன் ஸ்டாதம். 'ட்ரான்ஸ்போர்ட்டர்', 'டெத் ரேஸ்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து, உலக அளவில் பிரபலமடைந்தவர். இவரது வருங்கால மனைவி ரோஸி ஹட்டிங்டன், பிரபல மாடலாகவும் நடிகையாகவும் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் எங்கேஜ்மென்ட் செய்துகொண்டனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது எனப் பல வதந்திகள் வலம் வந்தாலும், தங்கள் திருமணம் பற்றிய எந்தத் தகவலையும் இந்த ஜோடி உறுதி செய்யவில்லை. 

தங்களின் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் உள்ளது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் ரோஸி. அதைப் போலவே, ஜேசன்-ரோஸி ஜோடி குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 24-ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரோஸி. தங்கள் மகனுக்கு ஜேக் ஆஸ்கர் ஸ்டாதம் என்று பெயரிட்டுள்ளது ஜேசன் ஸ்டாதம்-ரோஸி ஹட்டிங்டன் ஜோடி. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close