Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’எங்க டீமோட பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பாருங்க..!’’ - வெங்கட் பிரபு & டீம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் இப்போதைய டிரெண்டிங் மேட்டர். யூடியூப்பில் டாப் டிரெண்டிங் அடித்துக்கொண்டிருக்கும் பத்து வீடியோக்களில் குறைந்தது ஆறு வீடியோக்கள் இந்த நிகழ்ச்சி சம்பந்தமானதாகவே இருக்கிறது. தற்போது, இந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சியை மையப்படுத்தி இயக்குநர் வெங்கட்பிரபுவும் அவரது குழுவினரும், `மொட்ட பாஸ்' என்ற சீரிஸை விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறி அதற்கான `ஸ்னீக் பீக்'கையும் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா மற்றும் அஜய்ராஜ் தோன்றும் இந்த 50 விநாடி வீடியோ செம ரகளை. சிவா கேமராவைப் பார்த்து `எல்லோரும் சேர்ந்து என்னையவே டார்கெட் பண்றாங்க. நான் ஜெயிச்சுடுவேன்னு இவங்க எல்லோருக்கும் பயம். ஏன்னா, நான் மட்டும்தான் இந்த இண்டஸ்ட்ரியிலிருந்து வரல' என்று பேசி ஜூலியை ஜாடையாக கலாய்க்க, நிதின் சத்யாவோ `க்ளீனிங் டீம்' உறுப்பினர் போல ப்ரஷ் போட்டு துடைத்துக்கொண்டே இருக்கிறார். செல்போனில் பேசிக்கொண்டே ஃபிரேமுக்குள் வரும் ஜெய், `ஸாரி, ஸாரி...' என்று சொல்லி செல்போனை மறைத்துவிட்டு `சாப்பாடே இல்ல' எனப் புலம்புகிறார். அஜய்ராஜ் ஓரமாக உட்கார்ந்து யோகா செய்துகொண்டிருக்கிறார். இந்த வீடியோவைப் பற்றி வெங்கட் பிரபுவிடம் பேசினோம்.

’நீங்களும் 'பிக் பாஸை' கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா..?’ என்றதும், ''அச்சச்சோ இதை கலாய்ச்சு பண்ணலைங்க. பிக் பாஸ் பார்த்தோம், இதைப் பற்றி ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு, அதுனால்தான் எங்க பசங்க கூட சேர்ந்து சும்மா ஜாலியா பண்ணுனோம். வாரத்துக்கு ஒன்று இது மாதிரி 'பிக் பாஸ்' பற்றி கிரியேட்டிவா வரும்'' என்று சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தார் வெங்கட்பிரபு.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close