Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்டாவ காணோம் படத்துல விஜய் சேதுபதி யாரு? - ரகசியம் உடைக்கும் டைரக்டர் வேல்மதி

அறிமுக இயக்குநர் வேல்மதியின் திரைப்படம் 'அண்டாவ காணோம்.' சில நாள்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெறும் அண்டாவுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளது ஹைலைட். இந்தப் படத்தின் சுவாரஸ்யங்களைத் தெரிந்துகொள்ள வேல்மதியைத் தொடர்புகொண்டோம்.

அண்டாவ காணோம்

 

''நண்பர்கள் அனைவரும் ஒருநாள் டீ கடையில் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இந்தப் படத்துக்கான ஒன் லைன் கிடைத்தது. அந்த ஒன் லைனை அப்படியே பிடித்து வடிவமைக்கப்பட்டதுதான் 'அண்டாவ காணோம்'. படத்தில் ஒரு ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரத்துக்கு ஒரு நடிகையைத் தேடினோம் அப்போதுதான் இந்தப் படத்துக்கு ஸ்ரேயா ரெட்டி கிடைத்தார். முதலில் அவரிடம் கதை சொல்ல சென்றபோது, 'ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சினிமாவில் நடிக்கப்போகிறேன். அதனால், வலுவான கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிப்பேன்’ என்று கூறியவர், கதையைக் கேட்டவுடன் நான் நடிக்கிறேன் என்றார். 

இந்தப் படத்தில் மட்டும் சுமார் 200 அண்டாக்களைப் பயன்படுத்தியிருக்கோம். இந்த அண்டாக்கள் அனைத்தையும் படத்தின் கதைக் களமான தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களின் வீடுகளிலிருந்துதான் சேகரித்தோம். அண்டாவை மக்களிடமிருந்து வாங்கியதைவிட திரும்ப கொடுக்கும்போதுதான் அதிகமாகச் சிரமப் பட்டோம். ஏனென்றால், அண்டாவில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களைப் பார்த்து திரும்ப கொடுத்து முடிப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டோம். படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள்தான். அவர்களைத் தேர்ந்தெடுத்து இந்தப் படத்துக்காக மூன்று மாதம் பயிற்சி கொடுத்து படத்தில் நடிக்க வைத்தேன். படத்தின் உயிர்தன்மைக்காகத்தான் இப்படி மெனக்கெட்டோம். 

படத்தில் ஸ்ரேயா ரெட்டி பெயர் 'சாந்தி'. சாந்தியின் அண்ணன்தான் விஜய்சேதுபதி. இதுக்கு மேல் இவர்கள் பத்தி சொன்னால் படத்தைப் பற்றி சொல்லவேண்டி வரும். படத்தில் அண்டாவுக்கான வாய்ஸ் விஜய்சேதுபதிதான் கொடுத்திருப்பார். இதற்காக அவர் தேனி ஸ்லாங், சென்னை ஸ்லாங்,  ஜெனரல் ஸ்லாங் என மூன்று மாடுலேசனில்  டப்பிங் வாய்ஸ் கொடுத்தார். இதில் ஜெனரல் ஸ்லாங்தான் படத்தில் பயன்படுத்தினோம். படத்தில் நிறைய ரசிக்க வேண்டிய காட்சிகள் இருக்கும் அதைப் படம் பார்க்கும்போது நீங்களே ஃபீல் பண்ணுவீங்க’’ என்று ஜாலியாக முடித்தார் வேல்மதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close