Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நான் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை..!’’ - விக்ரம்பிரபு

சத்ரியன்' படத்துக்குப் பிறகு, விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் 'நெருப்புடா.' இந்தப் படத்தை  தயாரித்திருப்பதும் விக்ரம் பிரபுதான்.  படம் பற்றிய தகவல்களுக்காக விக்ரம் பிரபுவிடம் பேசினோம். 

விக்ரம் பிரபு

 ''இந்தப் படத்தில் தீயணைப்பு வீரனாக நான் நடித்திருக்கிறேன். நான் தயாரிக்கிற முதல் படம் இதுதான். 'தீ' யை மையமாக வைத்து ஒரு பெயரைப் படத்துக்கு வைக்கலாம்னு நினைத்துக் கொண்டிருந்தபோது 'நெருப்புடா' பாடல் ரிலீஸானது.

உடனே இந்த 'நெருப்புடா' பெயர் நம்ம படத்துக்கு வைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. இதுதான் 'நெருப்புடா' பெயர்காரணம். படத்துக்கான சென்சார் போர்ட் முடிவுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சென்சாரின் முடிவு வந்தவுடன் படம் ரிலீஸாகும்’’ என்றவரிடம், 'சிலம்பாட்டம் இயக்குநர் சரவணனின் அடுத்த படத்தில் நடிக்கிறீர்களா..?'  என்று கேட்டதற்கு, ''இதை நானும் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தி ஒரு வதந்தி. நான் அடுத்து எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை’’ என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்ரம்பிரபு.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close