Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனைவி புகார் எதிரொலி... பாலாஜி மீது போலீஸ் வழக்குப்பதிவு!

விஜய் டிவி தொகுப்பாளர் பாலாஜி மீது அவர் மனைவி நித்யா சில நாள்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். 

நித்யா


அதில் அவர், என் கணவர் பாலாஜி சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் இருந்தது. இதனால் மனமுடைந்த நித்யா இது தொடர்பாக கடந்த ஜூன் 1-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் அவர், ’மாதவரம் போலீஸார் எனது வழக்கைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள்’ என்று புகார் கூறி மனு ஒன்றை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.


இந்தப் புகார் தொடர்பாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய மாதவரம் போலீஸார் நடிகர் பாலாஜி மீது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாகப் பேசி கொடுமைப்படுத்தியது, பெண்கள் வன்கொடுமை சட்டம், சாதி ரீதியாக அவரை இழிவுபடுத்திப் பேசியதாக sc/st act உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து பாலாஜியை விரைவில் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close