Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரஜினியிடம் சொன்னேன்; செய்தார்!' - நெகிழும் சேரன்

ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரிக்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரிகளுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

rajini tweet

 

இயக்குநர் சேரன் 'தமிழ் சினிமா இக்கட்டான சூழலில் உள்ளது. அதைக் காப்பாற்றுங்கள்' என்று திரைத்துரையைச் சேர்ந்த பலரும் கூறிவருகின்றனர். ஜிஎஸ்டி வரியை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் எதிர்த்து வருகிறார். 'ஜிஎஸ்டி வரியால் நான் தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும்' எனவும் அதிர வைத்தார். ஆனால், இந்த இரட்டை வரிகளைப் பற்றி ரஜினி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், 'திரைத்துறையை வதைக்கும் இரட்டை வரிகள் தொடர்பாக நடிகர் ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும்' என இயக்குநர் சேரன் கூறியிருந்தார். சேரனின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ரஜினியும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராகத் தனது கருத்தை இன்று  ட்விட்டரில் பதிவுசெய்தார். இதை நடிகர் கமல்ஹாசனும் வரவேற்று இருக்கிறார்.

இயக்குநர் சேரனிடம் பேசினோம். ''ஜிஎஸ்டி மற்றும் திரையரங்குகள் மூடல் சம்பந்தமாக நான் கூறுவதைவிட சினிமாத் துறையில் நீண்ட வருடங்கள் இருப்பவர்கள் கூறினால் சரியாக இருக்கும்'' என்றவர், ''ஜிஎஸ்டி சம்பந்தமாக எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ரஜினியிடம் கூறினேன். அவர் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'' என்றதோடு முடித்துக்கொண்டார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close