Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரீல் லைஃப் வில்லன், ரியல் லைஃப் ஹீரோ ஆன கதை..!

விஜய்யின் 'தெறி' படத்தில் ஒரு ஃபைட் சீனுக்காக வந்தவர், சாய் தீனா. தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த பல படங்களில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரையும் கதிகலங்கவைப்பவர். தனது ரியல் வாழ்க்கையில் ஒரு ஹீரோவாகவே வாழ ஆசைப்படுகிறார். 'காதல்' படத்தில் நடித்த `விருச்சககாந்த்'-க்கு அடைக்கலம் கொடுத்தவர். தனுஶ்ரீ என்ற குழந்தையின் மருத்துவச் செலவுக்கு, சமூக வலைதளங்களின்மூலம் 36 லட்சத்தை திரட்டிக் கொடுத்துள்ளார். இதுபற்றி, தீனாவிடம் பேசினோம்.

தீனா


''என் நண்பர் மூலமாக குழந்தை தனுஶ்ரீ குடும்பத்தின் அறிமுகம் கிடைத்தது. மஞ்சள் காமாலையால் தனுஶ்ரீ-யின் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. என்னால் முடிந்த உதவியாக, 10,000 கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் தனுஷ்ஶ்ரீ-யின் அம்மா, ஆபரேஷனுக்கு 28 லட்சம் செலவாகும் என்று கூறி அழுதார்கள். என்னால் என்ன பண்ண முடியும்? என்று எதுவும் சொல்ல முடியாத நிலையில் வந்துவிட்டேன். ஒரு இரண்டு நாள்கள் கழித்து தனுஶ்ரீ அம்மா போன்செய்து, ’ரொம்ப ஆபத்தான நிலையில் தனுஶ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். உயிருக்கே ஆபத்து’ என்றார். நான், என் மொபைலில் தனுஶ்ரீ பற்றி ஒரு வீடியோ காட்சியை எடுத்து, அதை என் நண்பர் 'வண்ணாரப்பேட்டை' இயக்குநர் மோகனுக்கு அனுப்பி, ஷேர் பண்ணச் சொன்னேன்.

தீனா

மோகன், அவரது ஃபேஸ்புக்கில் அதை ஷேர்செய்தார். ஷேர் செய்த இரண்டு நாள்களில், குழந்தையின் மருத்துவச் செலவுக்காக 36 லட்ச ரூபாய் வந்தது. ஆபரேஷனுக்கான செலவு போக மீதிப் பணத்தை, மற்ற குழந்தைகளின் மருத்துவச்செலவுக்கு பகிர்ந்து கொடுத்தோம். மேலும், எல்லாவற்றுக்கும் செலவான பணத்துக்கு சரியான கணக்கு வைத்துள்ளோம். அதையும் வெளியிடுவோம். அதன் பிறகு, 'எங்களுக்கும் உதவிசெய்யுங்கள்' என்று பல பேர் என்னை அணுகிறார்கள். என்னிடம் அந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இதற்கு அரசாங்கம்தான் வழிசெய்ய வேண்டும்'' என்று கூறினார், சாய் தீனா.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close