Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி இரண்டாம் பாகம்' விரைவில் தொடக்கம்!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியானப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. வடிவேலு டபுள் ஆக்‌ஷனில் கலக்க, மனோரமா, நாசர், இளவரசு, தேஜ ஶ்ரீ, மோனிக்கா, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி படத்துக்கு இசையமைத்திருந்தனர். 

Imsai Arasan 23rd Pulicasi


செம ஹிட் அடித்த இந்தப் படம் வடிவேலுவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வடிவேலு ஹீரோ அவதாரம் எடுத்தார். தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில், இம்சை அரசனுக்கு எவர் க்ரீன் இடம் உண்டு. இந்நிலையில், இந்தப்படம் வெளியாகி இன்றுடன், 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையொட்டி, ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

அந்த அறிவிப்பில், "புலிகேசி வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. விரைவில் புலிகேசி இரண்டாம் பாகம் தொடங்கும்" என்று கூறியுள்ளார். குறிப்பாக, அந்த ட்வீட்டுடன் படத்தின் இயக்குநர் சிம்பு தேவன் வரைந்த இம்சை அரசன் - 2 குறித்த, கார்ட்டூன் ஒன்றையும் இணைத்து ட்வீட்டியுள்ளார்.

 


விரைவில் படத்தில் நடிக்க உள்ள  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விவரங்கள் தெரியவரும்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close