Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாடல்களே இல்லாத இளையராஜா படம்!'

மலையாளம், இந்தி, தமிழ் என மூன்று மொழி சினிமாக்களிலும் விமர்சன ரீதியாகப் படம் கொடுத்தவர் இயக்குநர் பிரியதர்ஷன். தற்போது உதயநிதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். இந்தப் படம் பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவான 'மகஷின்டே பிரதிகாரம்' படத்தின் தழுவல்தான் எனக் கூறப்பட்டுள்ள நிலையில். பிரியதர்ஷன் இதற்கு முன்பாகவே 'சில சமயங்களில்' படத்தை எடுத்து முடித்துள்ளார். கூடிய விரைவில் வெளியாகப்போகும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், சண்முகப்பாண்டியன் எனப் பலர் நடித்துள்ளனர். ஒரு மெடிக்கல் லேப்பில் இருக்கும் எட்டுப் பேர்களின் கதைதான், 'சில சமயங்களில்.' இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் 18 நாளில் முடிந்துவிட்டது.   

சில சமயங்களில்

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால், படத்தில் பாடல்களே கிடையாது. முதலில் இந்தப் படத்தை இந்தியில் எடுக்கலாம் என்றுதான் பிரியதர்ஷன் முடிவு செய்திருக்கிறார். பிரியதர்ஷனிடம் சினிமா கற்ற இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை தயாரிப்பது படத்தின் மற்றுமொரு ஸ்பெஷல். நிறைய சஸ்பென்ஸ்களைக் கொண்டு படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பற்றிய விழிப்பு உணர்வை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close