Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’ட்விட்டருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை..!’’ - இயக்குநர் பிரபுசாலமன்

'கும்கி 2 ' படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் பிரபுசாலமன் .'கும்கி' படத்தில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியது போன்றே இந்தப் படத்திலும் புதுமுகங்களையே நடிக்க வைக்கும் முயற்சியில் பல இடங்களில் வலைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால், யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகாதநிலையில், படத்துக்கான லொகேஷனை முடிவுசெய்து விட்டார். இன்னும் சில தினங்களில் அதிரகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில்,

பிரபு சாலமன்

இயக்குநர் பிரபுசாலமன் என்ற பெயரிலுள்ள ட்விட்டர் கணக்கிலிருந்து, ’சம்பளம் 2 கோடிக்கு மேல், ஏசி கேரவன் ஆனால் ஒரு நாள் 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டாராம் அந்த பெரிய நடிகரின் மகள்’ என்று ட்விட் வெளியாகியிருந்தது. இந்த ட்விட்டைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், பிரபுசாலமன் குறிப்பிடுவது ஸ்ருதிஹாசனைதான் என கமென்ட் அடிக்கத் துவங்கிவிட்டனர்.

இதை உறுதிப்படுத்திக்கொள்ள பிரபு சாலமனை தொடர்புகொண்டோம். '' கும்கி 2 வேலைகளில்தான் நான் பிஸியாக இருக்கிறேன். படத்தில் நடிக்க புதுமுக நாயகன், நாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடிவாகவில்லை. தற்போதுதான் லொகேஷன் பார்த்துவிட்டு பர்மாவிலிருந்து திரும்பியுள்ளேன்'' என்றவரிடம், 'சர்ச்சைக்குரிய ட்விட் பற்றி கேட்டால்', எனக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் என எந்தச் சமூக வலைதளங்களிலும் அக்கவுன்ட் இல்லை. அது யாரோ என் பெயர் சொல்லி போலியாகப் பதிவு செய்திருக்கிறார்கள். நான் 'கும்கி 2' வேலைகளில்தான் தற்போது பிஸியாக இருக்கிறேன்’’ என்றார் பிரபுசாலமன். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close