Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'’வீட்டுக்குப் போகலை... தனியறையில் வச்சிருக்காக!’' - பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே கஞ்சா கருப்பு

அடுத்தடுத்து நட்சத்திரங்கள் வெளியேறுவதால், பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டைவிட்டு கஞ்சா கருப்பு வெளியேறுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 'நான் எங்கேயும் செல்லவில்லை. 100 நாள்கள் முடியும் வரையில், எங்கேயும் செல்ல அனுமதியில்லை. அவர்கள் கொடுத்த அறையில்தான் தங்கியிருக்கிறேன்' என்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. 

ganja karppu


14 அத்தியாயங்களைக் கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது வரையில் நடிகை அனுயா, நடிகர் கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். தொடக்கத்தில், உடல்நலமின்மையைக் காரணம் காட்டி நடிகர் ஶ்ரீ வெளியேறினார். மீதமுள்ள 12 போட்டியாளர்களில் யாருக்கு வெற்றி என்பதில், மிகப் பெரும் மோதலே நடந்துகொண்டிருக்கிறது. அடுத்து வரப் போகும் 83 நாள்களில் இதற்கான விடை கிடைக்க இருக்கிறது. இன்றைக்கு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரொமோ காட்சியில், நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலை, தொடர்ச்சியாகத் தக்க வைக்கும் முயற்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது அனைவரையும் கட்டிப் பிடித்த நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் பரணியை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், இப்போது கஞ்சா கருப்பு என்ன செய்கிறார் என்பதை அறிய, அவரைத் தொடர்புகொண்டோம். 

ganja karppu

" வணக்கம் சார் எப்படி இருக்கீங்க..?" 

" நல்லா இருக்கேன்..!"

" பிக் பாஸ் அனுபவம் எப்படி சார் இருந்தது?" 

" நான் இப்போ பேட்டியே கொடுக்க மாட்டேன்! தப்பா நினைச்சுகாதீங்க..!" 
 
" ஏன் சார்..? என்ன காரணம்..?"

" அக்ரீமென்ட் போட்டுயிருக்காங்க... அதாவது நூறு நாளைக்கு, இந்த ஷோ முடியறவரைக்கும் இன்டெர்வியூ கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..."  

"உங்க அனுபவத்தைக்கூட சொல்ல மாட்டீங்களா?" 

"சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன். இப்போகூட அவங்க வேலையாத்தான் (பிக் பாஸ்) ரூம் போட்டு கொடுத்திருக்காங்க. நான் போன்ல பேசக்கூடாது, தவறா நினைக்காதீங்க!"   

"அப்போ... அவங்க கொடுத்திருக்கிற ரூம்லதான் இருக்கீங்களா, வீட்டுக்குப் போகலையா?" 

"ஆமா, வீட்டுக்குப் போக மாட்டேன். நூறு நாள் முடியுற வரைக்கும், வீட்டுக்குக்கூட போகக் கூடாது. எல்லா வசதியும் இந்த ரூமில இருக்கு". 

"உங்கள் குடும்பத்தார்கிட்ட பேசுனீங்களா?" 

" ஆ... பேசுவேன்.. பேசுவேன். ஆனா, இதுக்குமேல உங்ககூட பேச மாட்டேன். தவறா நினைக்காதீங்க. நன்றி வணக்கம்..!’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close