Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து பரணி வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் பரணி வெளியேற்றப்பட்டார். 


கமல் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலமான 15 பேர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏற்கெனவே மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில், நடிகர் ஶ்ரீ மட்டும் உடல் நிலையைக் காரணம் காட்டி தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிப் ப்ரோமாவில் நடிகர் பரணி சுவர் ஏறிக் குதிப்பது போன்று காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பரணியிடம் தனி அறையில் பிக் பாஸ் பேசினார். அதில் பேசிய பரணி, 'நேற்று நான் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவேன் என்று எண்ணினேன். ஆனால், நான் வெளியேற்றப்படவில்லை. மாறாக கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார். அது ஏமாற்றமாக அமைந்தது. நான் வெளியே செல்ல விரும்புகிறேன். அதனால்தான் சுவர் ஏறிக் குதித்தேன்' என்றார். உங்களது விருப்பம் நிறைவேற்றப்படும் என்று பிக்பாஸ் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பரணியை மீண்டும் அழைத்த பிக்பாஸ் தரப்பு, சுவர் ஏறி தப்பிக்க முயன்றதற்காக உங்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுகிறோம்' என்று அறிவித்தது. அதனால் நடிகர் பரணி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close