Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி பட ஷூட்டிங்; குற்றாலத்தை டிக் செய்ய என்ன காரணம்? 

பிரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்துக்கான படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.  

உதயநிதி

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம், 'மகேஷின்டே பிரதிகாரம்'. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஐந்து மாநில விருதுகளைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார், இயக்குநர் பிரியதர்ஷன். ஃபஹத் கேரக்டரில் உதயநிதி நடிக்கிறார். நமீதா பிரமோத், பார்வதி நாயர் என இரண்டு நாயகிகள். கதைப்படி, உதயநிதியுடன் சண்டை போடும் கேரக்டரில் சமுத்திரகனி நடிக்கிறார். தமிழுக்கு ஏற்ற மாதிரி காமெடிக்காக எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் நடிக்கிறார்கள். இசை, தர்புகா சிவா. 

இந்தப் படத்தின் ஷூட்டிங், வரும் 19-ம் தேதி முதல் தென்காசி, குற்றாலம், களக்காடு பகுதிகளில் தொடங்கவிருக்கிறது. 'மகேஷின்டே பிரதிகாரம்'  படத்தில், இடுக்கி மாவட்டத்தையும் அங்குள்ள இயற்கை அழகையும் அப்படியே படத்தில் பதிவுசெய்திருப்பார்கள். அதுபோல, தமிழிலும் இயற்கை எழில், மலைகளின் பசுமை என உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தென்காசியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறது படக்குழு. அதுமட்டுமன்றி, பொதுவாக மலையாளப் படங்களைத் தமிழில் ரீமேக் செய்யும்போது, நேட்டிவிட்டிக்காக முதலில் தேர்ந்தெடுக்கப்படும் இடமும் இதுவே.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close