Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மிருதன்-2 வருவது உறுதி!'' - இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்

சிபிராஜை வைத்து 'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தைக் கொடுத்த இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து 'மிருதன்' படத்தைக் கொடுத்தார். ஒரு வித்தியாசமான கதையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், தமிழில் முதல் 'ஸோம்பி’ வகை திரைப்படம் எனப் பெயர் வாங்கியது.

miruthan

'மிருதன்' படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்றுத்தந்தது. அதனால், இவர்களின் கூட்டணி தற்போது 'டிக் டிக் டிக்' படத்திலும் தொடர்கிறது. 'மிருதன்' படத்துக்குப் பிறகு, இரண்டு கதைகளுடன் ஜெயம் ரவியைச் சந்தித்திருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். அதில் 'டிக் டிக் டிக்' கதைக்கு டிக் அடித்துள்ளார் ஜெயம் ரவி என்று கூறிய இயக்குநரிடம்... 'மிருதன் படத்தை முடிக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியைக் குறிப்பிட்டு இருப்பீர்கள். 'மிருதன்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது’ என்று கேட்டால்,’’ 'டிக் டிக் டிக்' படத்தின் புராஜெக்ட் முடியும் வரை வேறு ஒரு கதையைப் பற்றி யோசிக்கமாட்டேன். ஆசிய சினிமாவுக்கே 'டிக் டிக் டிக்' படம் புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும். 'மிருதன் 2' வருவது உறுதி. ஆனால், 'சங்கமித்ரா' படத்துக்காக ஜெயம் ரவி ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதனால், ஜெயம் ரவியும் 'சங்கமித்ரா 'புராஜெக்ட் முடித்த பின்பு, 'மிருதன் 2' ஆரம்பமாகும். அதில் கண்டிப்பாக ஜெயம் ரவி இருப்பார்'' என்றார் சக்தி செளந்தர்ராஜன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close