Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் நியாயமானது!'- இயக்குநர் வசந்த பாலன்

தமிழ் சினிமாவுக்கு மிகவும் அழுத்தமான படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாக வசந்த பாலன் பெயரும் இருக்கும். பத்து வருடங்களுக்கு மேலான அவரின் சினிமா வாழ்க்கையில் இதுவரை அவர் ஐந்து படங்களைக் கொடுத்திருந்தாலும், ஐந்தும் தமிழ் சினிமாவிலிருந்து தவிர்க்க முடியாத படங்கள்தான். இவரது 'அங்காடித் தெரு' மற்றும் 'காவியத் தலைவன்' படங்கள் தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் இடம்பெற்றுள்ளன. அதிலும் 'காவியத் தலைவன்' திரைப்படம் பத்து விருதுகளுக்கு மேல் வென்றுள்ளது. மகிழ்ச்சியில் இருக்கும் வசந்தபாலனை தொடர்புகொண்டு பேசினோம்.

வசந்த பாலன்

'' காவியத் தலைவன் திரைப்படம் மக்களிடம் சரியாக சென்று அடையவில்லை என்ற வருத்தம் இருந்தது. இந்தப் படத்துக்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் இருந்தது. ஆனால், இன்று இந்தப் படத்துக்காக பத்து விருதுகள் கிடைத்துள்ளன. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. 

இந்தப் படத்தில் நாசர், பொன்வண்ணன், தம்பி ராமையான்னு சீனியர் ஆக்டர்ஸ் இருந்தாங்க. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் யாரையும் நான் கூப்பிட்டு இதுதான் உன் சீன், டையலாக்ஸ்னு யார்கிட்டயும் சொல்லவில்லை. டேக் போறதுக்கு முன்னாடி எல்லோரும் பல முறை  நாடகத் தன்மையில் பேசி ஒத்திகைப் பார்ப்பாங்க. அவங்க எல்லோரும் ஓகே சொன்னதுக்குப் பிறகுதான், நான் டேக் சொல்வேன். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சீன்ஸ் நிறைய இந்தப் படத்தில் இருக்கு. 

`ஏன்? சில படங்கள் நிஜமாக இல்லாமல் பொய்யாருக்கு’ன்னு நான் நினைப்பேன். இந்தப் படத்தில் காட்சிகள் எல்லாம் நிஜம்போலவே இருந்ததுக்கு நடிகர்களின் பிராக்டிஸ்தான் காரணம். நாசர் என்னிடம்கூட சொன்னார். '' நீங்கள் டேக் சொல்லுவதற்கு முன்பு, எங்களை எப்படி ஒத்திகை பார்க்க சொன்னீர்களோ, அதையேதான் நாங்கள் 'பாகுபலி' படத்திலும் பின்பற்றினோம். ஒத்திகை பார்த்துவிட்டுதான் டேக்குக்குப் போவோம் என்று. இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டருக்கும் விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் பயன்படுத்திய உடைகள் எல்லாவற்றையும் ஆர்.எஸ்.மனோகர் குடும்பத்தில் பேசி அவங்க கிட்டயிருந்து வாங்கி படத்தில் பயன்படுத்தினோம். எல்லாமே பழசாக தெரியனும்னு ஆர்ட் டைரக்டர் இதுமாதிரி, இந்தப் படத்தில் செய்தார்'' என்றவரிடம்,

காவியத்தலைவன்

சிலர்  தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்களே? எனக் கேட்டதற்கு, ''என் படங்களுக்கு நியாயமான முறையில்தான் விருதுகள் கிடைத்துள்ளன என நான் கருதுகிறேன். உண்மையான உழைப்புக்கு எத்தனை வருடங்கள் ஆன பின்பும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதைதான் இந்த விருதுகள் எனக்கு உணர்த்துகின்றன’’ என்றார் எதார்த்தமாக வசந்தபாலன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close