Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இல்லை, அதனால் என் கணவர் ஹாப்பி!' -கலகலக்கும் ஸ்ரேயா ரெட்டி

வேல்மதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'. சிறிது நாள்களுக்கு முன்புதான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது. அண்டாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, சினிமாவில் இந்தக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன. இதுகுறித்து ஸ்ரேயா ரெட்டியிடம் பேசினோம்.

ஷெர்யா ரெட்டி

''திமிரு படம் ரிலீஸாகி, என்னுடைய நடிப்பு எல்லோருக்கும் பிடித்து, ரசிகர்கள் என்னை கவனிக்கத் தொடங்கும்போதே, நான் திருமணம் பண்ணிகிட்டேன். திருமணத்துக்குப் பிறகு, நடிக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை. நல்ல கதைகள் அமையவில்லை. நிறைய கதைகள் கேட்டேன். நிறைய டைரக்டர்ஸ் 'மேம் உங்களுக்கு இந்தப் படத்தில் பெரிய ஸ்கோப் இருக்கு' அப்படியெல்லாம் சொன்னார்கள். ஆனால், கதையைக் கேட்டால் எதுவும் பிடித்த மாதிரி இல்லை. அதனால் நல்ல கதை வரட்டும் நடிக்கலாம் என்று வெயிட் பண்ணினேன். 'அண்டாவ காணோம்' படத்தின் கதையை நான் கேட்பதற்கு முன்பாகவே என் ஆபிஸில், ஃப்ரண்ட்ஸ், என் கணவர் எல்லோரும் ஸ்க்ரிப்ட் படித்துவிட்டு, இது உங்களுக்கான கதை, நீ இந்தப் படத்தில் நடிக்கணும் என்று சொன்னார்கள். அதுலயும் என் வீட்டுக்காரர், கண்டிப்பாக நான் இந்தப் படத்தில் நடிக்கணும்னு ரொம்பத் தீர்க்கமாக இருந்தார். இந்தப் படத்தில் எனக்கு ஜோடி யாரும் இல்லை என்பதால் அவருக்கு ரொம்ப சந்தோஷம்''  என்றவரிடம்,

ஒன்பது ஆண்டுகள் கழித்து கேமரா முன்பு நின்றபோது எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு கேட்டால்... ''எனக்கு மனசுக்குள்ளே ஒரு பயம், டச் விட்டு போய்ருச்சேன்னு. ஆனால், டைரக்டர் `மேடம் சும்மா நடிப்பில கலக்கிருவாங்க’ன்னு எண்ணம். என்னைத் தவிர என்கூட நடிச்சவங்க எல்லாம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லாம் ஜூனியர்ஸ் ஆக்டர்கூட இல்லை. அவங்க முன்னாடி நடிக்கிறப்போ நல்லா நடிச்சா... `ஆ சூப்பர் மேடம் கலக்கிட்டீங்க’ன்னு உடனே சொல்லிருவாங்க. கொஞ்சம் சரியா வரலைனா கூட ' அய்யே என்னமா இப்படி நடிக்கிறே' ன்னு முகத்துக்கு நேராகவே சொல்லிருவாங்க. படத்தில் நடிக்கும்போது தேனி பாஷை பேசி நடிக்கத்தான் ரொம்ப சிரமாக இருந்தது'' என்றார் ஸ்ரேயா ரெட்டி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close