Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தன்னைப் படம் எடுத்தவரை அசத்தலாக ‘க்ளிக்’கிய அஜித்..!

'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு, ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்க மூன்றாவது முறையாகக் கூட்டணி வைத்துள்ளனர் சிவா + அஜித் கூட்டணி. இந்தக் கூட்டணியில் மூன்றாவது முறையாக இவர்களுடன் கைக்கோத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. 'விவேகம்' படத்தின் அப்டேட்ஸுக்காக வெற்றியிடம் பேசினோம். 

ajith

'' 'சிவாவுடன் எனக்கு இது மூன்றாவது படம்’னு பலர் நினைச்சிட்டுயிருக்காங்க. ஆனால், அவருடன் எனக்கு இது ஆறாவது படம். தெலுங்கிலும் அவரது படங்களில் நான் ஒர்க் பண்ணியிருக்கேன். அவருடைய 'சிறுத்தை' படத்தில் மட்டும்தான் நான் வேலை பார்க்கவில்லை. உலகத் தரத்துக்கு 'விவேகம்' படத்தை எடுக்க அஜித் சாரும் சிவாவும் முடிவு செய்த பிறகு, நாங்க எல்லோரும் மீட் பண்ணினோம். 'விவேகம்' படத்தை இதுவரை பண்ணாத ஓர் அளவில் பண்ணணும்னு நிறைய திட்டம் யோசித்தோம். இதை மையப்படுத்தி லொகேஷன், கருவிகள் என எல்லாவற்றுக்கும் நாங்கள் ஒரு பெரிய அளவில் ஒர்க் பண்ணினோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது, 'விவேகம்' படம் மொழிப்படி தமிழ் படமாகயிருக்கும். ஆனா, லுக் வைஸ் பார்த்தால் ஒரு ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரமிப்பாக இருக்கும். 

இந்தப் படத்தை எடுப்பதற்கு முன்பு நிறைய ஹாலிவுட் படம் பார்த்தேன். ஒரு ஐடியாவுக்காகப் பார்த்தேன். ஏன்னா, அஜித்தை ஒரு இன்டர்நேஷனல் ஹீரோவா காட்டப்போறோம்னு என் அளவில் நிறைய கத்துக்கிட்டு ஒர்க் பண்ணினேன். இந்தப் படத்தோட டீசர் பார்த்து அஜித், சிவா மற்றும் சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் பாராட்டும்போது, ’நம்ம உழைப்பு வீண் போகவில்லை’ என்றுதான் தோன்றுகிறது. அஜித் எப்போதும் மனசில் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார். நல்ல ஷாட், லைட்டிங் இருந்தா உடனே பாராட்டுவார். இந்தப் படத்தில் நிறைய முறை அஜித் என்னை பாராட்டினார். அவரே ஒரு நல்ல போட்டோகிராபர். அதனால் அவருக்கு கேமரா நுணுக்கங்கள் தெரியும். அவர் பாராட்டுனது எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தது. 

விவேகம் அஜித் எடுத்தப் போட்டோ

அஜித், எப்போதும் அவருக்கான சீன்ஸ் எடுத்து முடித்தபிறகு கேரவன்குள்ள போய் உட்கார்ற டைப் கிடையாது. அந்த நேரத்தில் கேமராவை கையில் எடுத்துக்கிட்டு நமக்கே தெரியாமல் நம்மளை போட்டோ எடுத்துருவார். அதே மாதிரிதான் 'வீரம்', 'வேதாளம்' படத்தப்போ இயக்குநர் சிவா மற்றும் எல்லோரையும் போட்டோ எடுத்தார். ஆனா, என்னை மட்டும் எடுக்கவே இல்லை. அந்த வருத்தம் எனக்குள் இருந்தது. 'விவேகம்' படம் ஷூட் அப்போ, எனக்கு தெரியாமலேயே என்னை போட்டோ எடுத்து அனுப்பினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்தப் போட்டோவை எப்போது எடுத்தார் என்றே தெரியல. அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் இந்தப் போட்டோவை நான் சமூக வலைதளங்களில்கூட பதிவு செய்யவில்லை'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close