Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''என் அக்காவை நினைத்து பெருமைப்படுகிறேன்!'' - நெகிழும் சிபிராஜ்

80-களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சத்யராஜ். சமீப காலமாக 'கட்டப்பா'வாக மக்கள் மனதில் நின்றுகொண்டிருக்கிறார் சத்யராஜ். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரிகிறார். சமீபத்தில் இவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

சிபிராஜ்

மேலும், திவ்யா சத்யராஜூக்கு சில நாள்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வந்ததாகவும் செய்திகள் வந்தன. இதுபற்றி தெரிந்துகொள்ள திவ்யாவின் சகோதரரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவுமாகிய சிபிராஜை தொடர்புகொண்டோம். ''எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கு. என் அக்காவுக்கு இருக்கும் தைரியம் சத்தியமாக எனக்குக் கிடையாது. அப்பாவுக்கு இருக்கும் அதே தைரியம் அப்படியே அக்காவுக்கு இருக்கு. இந்தப் பிரச்னையை இதற்கு முன்னாடி நிறைய பேர் சந்தித்து இருப்பாங்க. ஆனா, அதை யாரும் இதுவரை துணிச்சலாக வெளியே சொல்லவில்லை. ஆனா, இந்த விஷயத்தைத் தைரியமாக என் அக்கா திவ்யா வெளியே சொன்னதைக் கண்டிப்பா பாராட்டியே ஆகணும். காவிரி பிரச்னை ஆகட்டும், தமிழர்களின் எந்தப் பிரச்னை ஆகட்டும் அப்போது எல்லாம் தைரியமாக அப்பா குரல் கொடுக்கும்போது அப்பாவை நினைச்சு பெருமைப்படுவேன், அதைவிட பல மடங்கு இன்று என் அக்காவைப் பார்த்துப் பெருமைப்படுறேன். 

sathyaraj


அக்காவுக்குக் கொலைமிரட்டல் வந்ததாகச் சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனா, கொலைமிரட்டல் வரவில்லை. அதற்கு மாறாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு சில மருந்தைப் பயன்படுத்த சொன்னார்கள். அதற்கு அக்கா சம்மதிக்கவில்லை. அதனால், நம்ம இந்திய நாட்டைப் பற்றி சற்று தரக்குறைவாகப் பேசிவிட்டார்கள். அதற்கு அக்கா 'இந்தியாவைப் பற்றி தப்பாகப் பேச நீங்கள் யார். வெளியே போங்கள்' என்று கூறிட்டாங்க. அதற்கு அவங்க, எங்களுக்கு அவங்கள தெரியும் இவங்கள தெரியும்னு மிரட்டல் தொனியில் பேசியிருக்காங்க. அதுமட்டும் இல்லாமல் மறைமுகமாக லஞ்சம் கொடுக்கவும் முற்பட்டிருக்காங்க. அதைக் கொலைமிரட்டல் என்று சில ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டுவிட்டனர்'' என்றவரிடம்,

இதுதொடர்பாக உங்கள் அக்கா திவ்யா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளாரே. இதற்கு நியாயமான தீர்வு கிடைக்குமா என்று கேட்டபோது, ''கண்டிப்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்னு நம்புறேன். ஏன்னா, சமுதாய அக்கறைகொண்ட நடிகர்கள் சிலரில் அப்பாவும் ஒருவர். அவருடைய மகள் ஓர் ஊட்டச்சத்து நிபுணராக, நம்ம நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக நம்ம நாட்டோட பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்காங்க. ஒரு நடிகருடைய மகள் என்பதையும் தாண்டி ஓர் இந்திய மகளாக அக்கா எழுதிய கடிதத்துக்குக் கண்டிப்பாக ஒரு தீர்வு இருக்கும்னு நம்புறேன்'' என்று நம்பிக்கையுடன் கூறினார் சிபிராஜ்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close