Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவில் தமிழ் படத்தில் நிவின் பாலி!''

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராகயிருக்கும் நிவின் பாலி நேரடி தமிழ் படமான 'ரிச்சி' படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. மேலும், இந்தப் படத்தின் டீசரில் நிவின் பேசிய வசனங்களும் செம்மையாக யூத்திடம் லைக்ஸ் அள்ளியது. கெளதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் நட்டி, ஷரத்தா ஶ்ரீநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நிவின் பாலி


தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவு நாயகி நயன்தாராவுடன் நிவின் பாலி கூடிய விரைவில் 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' படங்களில் டூயட் பாடயிருக்கிறார் நிவின் பாலி. இதற்கிடையில், நிவின் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவி இயக்குநர் பிரபு ராதாகிருஷ்ணன் தமிழில் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஶ்ரீராம் ஒப்பந்தமாகியுள்ளார்.
 24am ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அதுமட்டுமன்றி இந்தப் படத்தின் கதையையும் எழுதியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு மிக முக்கியமனதாக இருக்குமாம். அதனால் இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸ் என இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும். ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close