Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறதா ஹ்ரித்திக் ரோஷனின் 'காபில்' படம்?

சஞ்சய் குப்தா இயக்கத்தில், ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான படம் 'காபில்'. இப்படத்தை ராக்கேஷ் ரோஷன் தயாரித்தார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. மக்களின் கருத்துகளோடு சேர்த்து விமர்சனங்களும் இப்படத்துக்குக் கலவையாக வந்தது. கண் தெரியாமல் இருக்கும் ஹ்ரித்திகின் மனைவியைக் கற்பழித்து கொலை செய்துவிடுவார்கள். அதற்காகப் பழி வாங்கும் கதைதான் 'காபில்' படத்தின் ஒன் லைன். இந்நிலையில் '20th fox century' எனும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரீமேக் சம்பந்தமாக ஹ்ரித்திக் ரோஷனுடன் கலந்துரையாடல் நடத்தியது.

காபில்

படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தாவிடம் இது சம்பந்தமாக கேட்டதற்கு ''படத்தின் ரீமேக் சம்பந்தமாக ஃபாக்ஸுடன் பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டு இருப்பது உண்மைதான். இன்னும் முழுமையாக முடிவாகவில்லை. இந்தப் படத்தின் ரீமேக் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்ததே எங்களுக்கு முதல் பெருமை. 2017-ல், முதல் பாதி வருடத்தின் ஆன்லைன் கருத்துக்கணிப்பில் சிறந்த படமாக 'காபில்' வென்றுள்ளது. ஹாலிவுட்டில் இந்தப் படம் ரீமேக்கானால் எங்களுக்கு அது இரட்டிப்பு வெற்றி'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close