Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நடிகர் கமல்ஹாசனால் மட்டுமே இது சாத்தியம்!' - நெகிழும் நாஞ்சில் சம்பத்

தமிழக அரசு குறித்து நடிகர் கமல்ஹாசனின் விமர்சனமும் அதைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பதிவுகளும் அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது. 'அரசாங்கத்தை விமர்சிப்பது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகத்தான் பார்க்கிறேன்' என்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத். 

nanjil sampath

விஸ்வரூபம் 2-ம் பாகம், சபாஷ் நாயுடு போன்ற படங்களில் பரபரப்பாக இயங்கினாலும், அரசியல்ரீதியாகக் கருத்துகளைச் சொல்வதில் நடிகர் கமல்ஹாசன் என்றுமே தயங்கியது கிடையாது. அதிலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த அவரது விமர்சனத்துக்கு அமைச்சர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

kamal

நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். ''எனக்கு கமல்ஹாசனை ஒரு நடிகராக மிகவும் பிடிக்கும். அவர் ஒரு நல்ல கலைஞர். கலையுலகத்தில் அவர் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. தமிழ் திரை உலகுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றால், அதை வாங்கித் தரக்கூடிய ஆற்றல் தமிழ் கலை உலகில் நடிகர் கமலுக்கு மட்டுமே உண்டு. அவர் அதைச் சாத்தியப்படுத்துவார். ஆகவே, அவர் எட்ட முடியாத உயரங்களை எட்டுவதற்கு அவரது சிறகுகளை அசைக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது. அவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. சமீபகாலமாகத் தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். தனது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி நடத்துவதை கமல்ஹாசன் தவிர்த்திருக்கலாம். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அதை நான் எதிர்ப்பேன். அரசாங்கத்தை கமல் விமர்சிப்பதை, அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகத்தான் நான் பார்க்கிறேன்" என்றார் நிதானமாக. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close