Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காலா' பட வழக்கில் ரஜினி பதில் மனு!

பரபரப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் 'காலா' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்தப் படத்தின் பெயரை நான் ஏற்கெனவே பதிவுசெய்துவிட்டேன் என்றும் ராஜசேகர் என்பவர் புகார் மனு ஒன்றை சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மே மாதம் 30-ம் தேதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், 'காலா' படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

kaala

அப்போது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், ரஜினி மற்றும் பா.ரஞ்சித் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மும்பையில் 'காலா' படப்பிடிப்பில் அனைவரும் இருப்பதால், பதில்மனு அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பதில் மனுத் தாக்கல் செய்ய ரஜினி மற்றும் பா.ரஞ்சித் தரப்புக்கு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், 'காலா'  படத்தின் வழக்குத் தொடர்பாக ரஜினி, ரஞ்சித் மற்றும் பட நிறுவனம் சார்பாக  இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜசேகரன் தொடர்ந்த வழக்கில் சென்னைக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். விளம்பர நோக்கத்துடன் 'காலா' படத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு பதிவு செய்த 'கரிகாலன்' தலைப்பை 2006-க்குப் பிறகு மனுதாரர் புதுப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தேவையில்லாமல் ரஜினியை எதிர் மனுதாராக வழக்கில் சேர்த்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர். காப்புரிமை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நாடாமல், உரிமையியல் நீதிமன்றத்தை நாடியதும் தவறு என்று படநிறுவனம் சார்பாக பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close