Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காலா' படத்தில் ரஜினியுடன் மோதும் மூன்று வில்லன்கள்!

கடந்த 12-ம் தேதி முதல், 'காலா' படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் பரபரப்பாக நடந்துவருகிறது. 'காலா'வில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் பட்டியல் இதுவரை வெளிவந்தது கொஞ்சமே. ரஜினியுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துக்கொண்டிருக்கிறது. அத்தனை பேரிடமும் 'நீங்கள் 'காலா'வில்  நடிக்கும் சேதியையோ, உங்கள் கேரக்டர் பற்றியோ வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள். குறிப்பாக, உங்கள் உறவினர்களிடம்கூட சொல்லிவிடாதீர்கள்' என்று  இயக்குநர் ரஞ்சித் அனைத்து நட்சத்திரங்களுக்கும்  அன்புக் கட்டளை போட்டிருக்கிறார். ரஞ்சித்தின் 'ரகசியம் காத்தல்' கோரிக்கையை ஏற்று, 'காலா'வில் நடித்துவரும் நட்சத்திரங்கள் எல்லோரும் படத்தின் கதை, நடித்துவரும் கேரக்டர், ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகள்  என்று  எதையும் வெளியில் கசியவிடாமல் காத்துவருகின்றனர். அதுசரி, 'காலா' படத்தில் ரஜினிக்கு எதிராக நடிக்கும் வில்லன்கள் யார் யார்? என்று விசாரித்தோம்.

காலா

'காலா' படத்தில், ரஜினியோடு மொத்தம் மூன்று வில்லன்கள்  மோதுகின்றனர்.  மூன்று வில்லன்களில் ஒருவரான  சம்பத், தாராவியில் நடக்கும்  தேர்தல் காட்சியில் எம்எல்ஏ பதவிக்காகப் போட்டியிடுகிறார். அவருக்காக பிரமாண்டமான கட்-அவுட் வைத்துத் கொண்டாடுகிறார்கள். 'தளபதி' படத்தில், சூர்யா கேரக்டரில் நடிக்கும் ரஜினி, ரவுடியாக நடிக்கும் பானுப்ரியாவின் கணவரை நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் காட்சி அப்போது பேசப்பட்டது. இப்போது அதைவிட வித்தியாசமாக, வில்லன் சம்பத்தை  ரஜினி படுகொலை செய்யும் காட்சியில், தியேட்டரே அதகளப்படும் என்று சொல்கிறார்கள். அடுத்து, இன்னொரு வில்லனாக சாயாஜி ஷிண்டே நடிக்கிறார். சம்பத், சாயாஜி இருவரையும் தூக்கிச் சாப்பிடும் எமகாதக வில்லன் வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார்.  அரசியலில் உச்சத்திலிருக்கும் நானா படேகரின் இரண்டு கரங்களாக சம்பத்தும், சாயாஜி ஷிண்டேவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் குறிவைத்து ஒழித்துக்கட்டும்  ரஜினி, அடுத்து நானா படேகருடன் மோதும் காட்சிகள் தியேட்டரில் ' காலா' படம்  பார்ப்பவர்களை இருக்கை முனைக்கு இழுத்துவரும் என்று சொல்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close