Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நீங்க ஷட்-அப் பண்ணுங்க..!’ - பாடலாகுமா ஓவியாவின் வைரல் வசனம்

 

 

தமிழ் சினிமாவுக்கு 'களவாணி' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்தப் படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்தாலும், தமிழ் சினிமாவில் ஓவியாவுக்கான இடம் வெற்றிடமாகத்தான் இருந்தது. சில படங்களில் நடித்த ஓவியா தற்போது விஜய் டி.வி-யின் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கிறார்.  இந்த வீட்டில் இருக்கும் பிரபலங்களில் ஓவியாவைதான் ஆடியன்ஸுக்குப் பிடித்திருக்கிறது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஓவியா எலிமினெட் ஆகாமல் இருக்க அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு ஓட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

oviya

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ஓவியாவை புகழ்ந்து பலர் மீம்ஸ், போட்டோஸ் எல்லாம் போஸ்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஸ், ஓவியா 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பயன்படுத்திய வார்த்தையான ‘நீங்க ஷட்-அப்  பண்ணுங்க' என்பதை மையமாக பலூன் படத்தின் புரோமோ பாடல் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். 

இதுபற்றி சினிஸிடம் கேட்டால். ''அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதைத்தான் போஸ்ட் செய்திருந்தேன். இதைப் பற்றி தற்போது கூறமுடியாது. ரெடியானதுக்குப் பிறகு நானே சொல்கிறேன்'' என்று கூறினார். சிறிது நாள்களுக்கு முன்புதான் சினிஸ் தனது அடுத்தப் படத்தில் காலங்கள் கூடிவந்தால் பரணியை நடிக்க வைப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close