Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''எனக்கு ஓவியாதான் இன்ஸ்பிரேஷன்!'' - நெகிழும் சீனு ராமசாமி #BiggBossTamil

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள்தான் இப்போதைய ஹாட் டாபிக். ' திரைப்படத்தில் நடித்தபோது இருந்த ரசிகர்களைவிட, இப்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது' என்கின்றனர் ஓவியா நட்பு வட்டத்தில் உள்ளவர்கள். 'ஓவியாவுக்கு நானும் ரசிகனாகிவிட்டேன்' என நெகிழ்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. 

seenu ramaswamy

சீனு ராமசாமியிடம் பேசினோம். "எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியா நல்ல நடிகை. திறைமையானவரும் கூட. அவர் மூன்று வருடங்களுக்கு முன்பு என்னுடைய 'நீர் பறவை' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' படத்தின் கதாபாத்திரம் தேர்வுக்கு வந்திருந்தார். அப்போது ஓவியாவிடம் நான் பேசியிருக்கிறேன். ஓவியாவின் அம்மாவுக்கு புற்றுநோய் இருந்த நேரம் அது. அதைக் கூறும்போதுகூட இயல்பாக இருந்தார். ஏதோ பரிதாபத்துக்காக இவர் சொல்கிறார் என நினைத்து விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர் அம்மாவின் சிகிச்சைக்காகத்தான் படங்களில் கமிட் ஆகிறார் என்று. அதைக் கேட்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போதே, எதிர்காலத்தில் ஓவியாவை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். சரியான பாத்திரம் அமையாததால், அவரை நடிக்க வைக்கும் முயற்சி தள்ளிக் கொண்டே போனது. 

oviya

'பிக் பாஸ்' வீட்டில் அவர் வெளியில் வந்தவுடன், என்னுடைய படங்களில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. ஒரு பெண் இத்தனை தடைகளைத் தாண்டி, மன வருத்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே சிரிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். நிறைய கலைநிகழ்ச்சிகளில் ஓவியா நடனம் ஆடுவார். அப்போதும் அவர் சிரித்துக்கொண்டுதான் ஆடுவார். ஒரு கொடிய நோய்க்குத் தனது தாயை பறிக்கொடுத்துவிட்டு, இன்னும் தனது வாழ்க்கையிலும் பெரிதாக செட்டில் ஆகாமல், கலைத்துறையில் புகழ்பெற வேண்டும் என நினைக்கும் ஓவியாவின் போராட்டக் குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்தச் சின்ன வயது பெண்ணுக்குள் இருக்கும் மன தைரியம் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஒரு படைப்பாளிக்குப் பாரதியும் ஷெல்லியும் ரவீந்திரநாத் தாகூரும்தான் இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சகமனுஷியின் இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கலாம். எனக்கு ஓவியாதான் இன்ஸ்பிரேஷனாகத் தெரிகிறார். அவர் மீது  ஒருவிதமான கரிசனமும் அன்பும் ஏற்படுகிறது. எனவேதான், அவரைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு செய்தேன்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close