Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தை இயக்க ஆசைப்படும் செளந்தர்யா ரஜினிகாந்த்!

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் 'விஐபி 2'. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' படத்துக்கான கதையை தனுஷே எழுதியுள்ளார். படத்துக்கான வசனமும் தனுஷ் என்பது கூடுதல் தகவல்.

செளதர்யா ரஜினிகாந்த்

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்திலும் அமலா பால், சமுத்திரக்கனி எனப் பலர் நடித்துள்ளனர். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். படத்துக்கான புரொமோஷன் வேலைக்காக இந்தப் படக்குழுவினர் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தனர். அப்போது பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த்.

`எனக்கு அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை’ என்று கூறியுள்ளார். ஆனால், அவர் அதற்காக தற்போது ஸ்க்ரிப்ட் எதுவும் ரெடி பண்ணவில்லை. 'இந்தப் படத்தைத் திட்டமிட்டபடி 50 நாளில் முடித்துவிட்டேன். அப்பாவிடம் இருந்துதான் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close