Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"மூன்று தேசிய விருதுகள்: ஆனால் மாநில விருது ஒன்றுகூட இல்லை" - வருந்தும் சீனு ராமசாமி

 2010-ம் ஆண்டு இறுதியில் வெளி வந்த படம், "தென்மேற்கு பருவக்காற்று". விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கியவர், சீனு ராமசாமி.

சீனு ராமசாமி


கிராமத்துப் பின்னணியில், ஒரு தாய் தன் மகனை தன்னந்தனியாக வளர்ப்பதை மையக் கருவாகக் கொண்ட படம். இந்தப் படம், அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது, தேசிய விருதில் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வானது. மேலும், சிறந்த நடிகையாக சரண்யா பொன்வண்ணன், சிறந்த பாடல் வரிக்காக வைரமுத்து என மொத்தம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.  

இந்நிலையில், பல வருடங்களாக அறிவிக்கப்படாத மாநில அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 2010-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் 'தென்மேற்கு பருவக்காற்று' ஒரு விருதுகூட பெறவில்லை. இதுகுறித்து, இந்தப் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று'க்கு மாநில விருது இல்லை. ஏன்?" எனக் கேள்வி எழுப்பி, தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close