Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சமூகக் கேட்டுக்குத் துணைபோக மாட்டேன்' - எதற்காகச் சொல்கிறார் காஜல்?

தெலுங்கு சினிமா பிரபலங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவதாக ஆந்திர காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து, அவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது காவல்துறை.

காஜல்


போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் மற்றும் பிரெண்டன் பென்  ஆகிய இருவரைக் கைது செய்தது போலீஸ். இவர்களுடன் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பலர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.  
முன்னணி தெலுங்கு நடிகர் ரவிதேஜா, தருண், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், காமெடி நடிகர் சுப்பா ராஜூ, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, பாடகி கீதா மதூரியின் கணவர் நந்து, தனிஷ், இளம் நடிகர்கள் தனிஷ், 'அறிந்தும் அறியாமலும்' நவ்தீப், நடிகை சார்மி, முமைத்கான் மற்றும் காஜல் அகர்வாலின் மேனேஜர்  புட்கர் ரோன்சன் ஜோசப் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. 

இந்நிலையில், தனது மேனேஜருக்கு போதைப்பொருள் வழக்கில் சம்பந்தம் இருப்பதால் அதிர்ச்சியடைந்த நடிகை காஜல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'போதைப் பொருள் விவகாரத்தில் என்னுடைய மேனேஜர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபட மாட்டேன். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி என் பெற்றோர்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close