Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருகிறது ஜேம்ஸ் பாண்டின் அடுத்த படம்..!

உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட வரிசையின் அடுத்தப் திரைப்படம் வரும் 2019-ம் ஆண்டு வெளிவர உள்ளது. 

James bond 007

இது ஜேம்ஸ் பாண்டு வகை படங்களில் வரப்போகும் 25-வது திரைப்படமாகும். 2019-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்தில் நடித்து வரும் டேனியல் க்ரேய்க் இந்தப் படத்திலும் ரகசிய உளவாளியாக நடிப்பாரா என்று இதுவரை உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. அதேபோன்று, சக நடிகர்கள் மற்றும் இயக்குநர் யார் யார் என்பது பற்றியும் சீக்கிரமே அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கு மவுசு குறைந்து வரும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் மிகவும் நேர்த்தியான திரைக்கதையுடன் இந்தப் படம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கடைசியாக வந்த ஜேம்ஸ் பாண்டு படங்களான, கேசினோ ராயல், க்வான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்டர் ஆகியவற்றுக்கு திரைக்கதை எழுதியவர்களான நீல் பர்வீஸ் மற்றும் ராபர்ட் வேட் ஆகியோர் தான் இந்தப் புதிய படத்துக்கும் திரைக்கதை எழுதுவர் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close