Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''காதல் சடுகுடு பாட்டை பீட் செய்ய நாங்கள் போட்ட பாட்டுதான் யாஞ்சி''- பாடல் ரகசியம் சொல்லும் மோகன் ராஜ்

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளிவந்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 'விக்ரம் வேதா'.  இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், மற்றும் ட்ரெய்லர் எல்லாம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேபோல் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. 

vikram vedha

இந்தப் படத்தில் இடம் பெற்ற 'யாஞ்சி' திரைப்பட பாடல் வெளியாகி பலரின் ரிங் டோன்னாக இடம்பெற்றது. இதற்கிடையில் இந்தப் பாடலின் வீடியோ இன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பாடலின் சுவாரஸ்யத்தைத் தெரிந்துகொள்ள பாடலாசிரியர் மோகன் ராஜிடம் பேசினோம்.

''இந்தப் பாடல் எழுதும் வாய்ப்பு எனக்குத் திடீரென்றுதான் வந்தது. பாடலின் வரிகளை ஒரே இரவில் எழுதி முடித்தேன். பாடல் எழுதும்போது என்னுடன் இசையமைப்பாளர் சாம் இருந்தார். அனிருத் எனக்காக பாடும் இரண்டாவது பாடல் இது. 'அலைபாயுதே' படத்தில் 'காதல் சடுகுடு' பாடல் மாதவனுக்கு ரொமான்டிக்வைஸ் எப்படி ஹிட்டானதோ அதுமாதிரி இந்தப் பாடலும் வெற்றி பெற வேண்டும் என்று எழுதினேன். 

பாடலில் இடம்பெற்ற 'யாஞ்சி' சீனாவில் இருக்கும் ஒரு நதியைக் குறிக்கும். அது மட்டுமல்லாமல் திரும்பத் திரும்ப என்பதையும் குறிக்கும். கவிதை மாதிரி இருக்குன்னு அதே நேரத்தில் கவிதையாகவும் தெரியக் கூடாது என்று நானும் இசையமைப்பாளர் சாமும் வடிவமைத்து எழுதிய பாடல் வரிகள் இது’’ என்றார் பாடலாசிரியர் மோகன் ராஜன்.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close