Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’பிந்து மாதவி மட்டுமல்ல... இன்னும் சில பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வர்றாங்க..!’’ - ஷாக் கொடுக்கும் விஜய் டி.வி

ரசிகர்களின் பல்ஸை அறிந்து அதற்கேற்ப புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டி.வி, இந்தியில் ஹிட் அடித்த மற்றும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழில் வழங்கி வருகிறது. 15 பிரபலங்கள், நூறு நாள்கள் தங்களைச் சுற்றியுள்ள கேமராக்கள் முன்னிலையில் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்க வேண்டும். யார் 'பிக் பாஸ்' தரும் சவால்களைச் சமாளித்து, ரசிகர்களின் ஓட்டுகளையும் பெற்று 'பிக் பாஸ்' டைட்டிலை வெல்லப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள நாம் இன்னும் 60 நாள்களுக்கு மேல் 'பிக் பாஸ்' வீட்டை ஃபாலோ பண்ண வேண்டும்.

bigg boss



'பிக் பாஸ்' வீட்டிலிருந்து இதுவரை ஶ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி, நமிதா என ஆறு பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் ஒன்பது பேரில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் ஆவலாக இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் திடீரென்று என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி. இவரின் என்ட்ரி சக போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

போட்டியில் 15 பிரபலங்கள்தானே, எப்படி பிந்துமாதவி சக போட்டியாளராக விஜய் டி.வி-யால் அறிவிக்கப்பட்டார். பிந்துமாதவி வருகை பற்றி கமலும் நிகழ்ச்சியின்போது விளக்கம் அளிக்கவில்லை. இதுபற்றி விஜய் டி.வி தரப்பைத் தொடர்புகொண்டோம்.

bindhu maadhavi



'' விஜய் டி.வி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நூறு சதவிகிதம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடப்பது எல்லாம் உண்மைதான். சிலர் நினைப்பதுபோல் ஸ்க்ரிப்ட் எல்லாம் இல்லை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ரசிகர்கள் யார் வெற்றியாளராக வர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியடைவார். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி என்ட்ரி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரின் என்ட்ரி விஜய் டி.வி-யால் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்தி 'பிக் பாஸ்'  நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு, சில பிரபலங்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதேபோல்தான் தமிழிலும் நடக்கிறது. இன்னும் சில பிரபலங்கள் தமிழ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாக என்ட்ரி கொடுப்பார்கள். அவர்கள் யார் யார் என்பது ரசிகர்களுக்கு பெரிய சஸ்பென்ஸாகயிருக்கும். நிகழ்ச்சி தொடக்கத்தில் இதையெல்லாம் சொல்லிவிட்டால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது என்பதால்தான் மற்ற பிரபலங்களின் என்ட்ரி பற்றி சொல்லவில்லை. 

வெளியிலிருந்து செல்லும் பிரபலங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் பல்ஸ் தெரியும். இதனால், புதியதாக 'பிக் பாஸ்' வீட்டில் களம் இறங்குபவர்களுக்கு ப்ளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் உண்டு. வரும் வாரங்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்'' என கூறி முடித்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close