Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபெஃப்சி ஸ்டிரைக் எதிரொலி: 'காலா', 'மெர்சல்' படப்பிடிப்புகள் ரத்து!

ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஃபெஃப்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

kaala


தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், 'ஃபெஃப்சி தொழிலாளர்கள் இல்லை என்றாலும் நாங்கள் வேறு சில தனிப்பட்ட தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக்கொள்வோம்' என்று தெரிவித்திருந்தார். மேலும், `தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் ஃபெஃப்சி அமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் ரத்து' எனவும் கூறியிருந்தார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர்  நடிகர் பிரகாஷ்ராஜ், இதற்காக பல முன்னேற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.  ஆனால், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதற்குச் சான்றாகவே இன்று 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, ரஜினியின் 'காலா' படத்துக்காக 15 கோடியில் அரங்குகள் அமைக்கப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட ஃபெஃப்சி தொழிலாளர்கள் அதில் பணியாற்றிவந்த நிலையில், ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு மாறாக 1,000 தொழிலாளர்களை உடனே வேலையில் அமர்த்த முடியாத காரணத்தால், 'காலா' படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது. விஜய்யின் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஷாலின் 'துப்பறிவாளன்' படப்பிடிப்பு, ஃபெஃப்சி தொழிலாளர்கள் இன்றியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ஃபெஃப்சி தொழிலாளர்கள் அமைப்பில், இதுவரை 23,000 தொழிலாளர்கள் உள்ளனர்.  ஃபெஃப்சி தொழிலாளர்களை மட்டும் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஃபெஃப்சி சார்பாக வைக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close