Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பிரபாஸூடன் நடிப்பதில் மகிழ்ச்சி!''- நடிகர் அருண்விஜய்

'குற்றம் 23' படத்துக்குப் பிறகு, அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'தடம்'. மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். ஏற்கெனவெ இவர்கள் கூட்டணியில் உருவான 'தடையறத் தாக்க' திரைப்படம் வெற்றி அடைந்தது. இந்தப் படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடித்திருக்கும் அருண்விஜயைத் தொடர்புகொண்டோம். 

arun vijay

''தடையறத் தாக்க படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் மகிழ்திருமேனியுடன் இணைந்திருக்கிறேன். எங்கள் கூட்டணியில் 'தடம்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. அதைப் பூர்த்திசெய்ய வேண்டும் எனக் கவனத்துடனே 'தடம்' படத்தை எதிர்கொள்கிறேன். தடையறத் தாக்க படம் ஆடியன்ஸை சீட் நுனியில் உட்கார வைத்தது. அதற்குப் படத்தின் திரைக்கதைதான் காரணம். அதேபோல இந்தப் படத்தின் திரைக்கதையும் படம் பார்க்கும் பார்வையாளர்களைப் பெரிதாக ஈர்க்கும். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும். என் கேரக்டர் பற்றிப் பேசினால், படம் பற்றி சொல்ல வேண்டிவரும். அதனால் எதுவும் தற்போது சொல்ல முடியாது. படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பார்கள். மூன்று பேருக்கும் வலுவான கதாபாத்திரம் இருக்கும். படத்துக்கும் அவர்களுக்கும் நல்ல தொடர்பு இருக்கும். 

படத்தின் இசையும்கூட கதையோடு சேர்ந்து அளவாக இருக்கும். முக்கியமாகக் கதைக்கு சப்போர்ட் பண்ற மாதிரி படத்தின் இசையிருக்கும். மகிழ்திருமேனி எப்போதும் கொஞ்சம் டைம் எடுத்து மெனக்கட்டு பண்ணுவார். அவரின் அர்ப்பணிப்பு எனக்குப் பிடிக்கும். ரொம்பத் தெளிவான கிரியேட்டர். அதனால்தான் நாங்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்தோம். இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு, எனக்கு காலில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாகத் தள்ளிப் போயுள்ளது'' என்றவரிடம், 

'தடையறத் தாக்க', 'தடம்' என மகிழ்திருமேனி மற்றும் உங்கள் கூட்டணியில் உருவாகும் படங்கள் எல்லாம் 'த' வரிசையில் இருக்கிறதே என்றால், 

thadam

''தடையறத் தாக்க பெயரை நாங்கள் கந்த சஷ்டியிலிருந்துதான் எடுத்தோம். 'காக்க காக்க கனகவேல் காக்க, தாக்க தாக்க தடையறத் தாக்க' என்று கந்த சஷ்டியில் வரும். ஆனால், இந்தத் ’தடையறத் தாக்க’ பெயர் பல பேரின் வாயில் சுலபமாக நுழையவே இல்லை. அதனால், இந்தப் படத்துக்கு சின்னதாக, அதே நேரத்தில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றேன். அப்போதுதான் 'தடம்' பெயரைச் சொன்னார். தடம் என்றால் ஒரு தடயம் என்று பொருள். இந்தப் படத்தில் தடம் ஒரு அங்கமாயிருக்கும். அதனால் இந்தப் பெயரை வைத்துவிட்டோம். மற்றபடி 'த' வரிசையில் இருக்க வேண்டும் என்று யோசித்தெல்லாம் வைக்கவில்லை'' என்றவரிடம்  பிரபாஸூடன் நடிக்கும் 'சாஹோ' படத்தைப் பற்றி கேட்டால்.

'சாஹோ படம் வாய்ப்பு எனக்கு முன்னாடியே வந்தது. என்னிடம் கதையைப் பற்றி பேசினார்கள். 'பாகுபலி' படத்துக்குப் பிறகு, 'சாஹோ' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.  அப்படிப்பட்ட படத்தில் என்னை நடிக்கக் கேட்டதே எனக்கு ஹாப்பி. பிரபாஸூடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் 'சாஹோ' படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. வந்தபிறகு, கண்டிப்பாக 'சாஹோ' பற்றி பேசுகிறேன்'' என்றார் அருண் விஜய்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close